தமிழ்நாடு வூசு சங்கம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா மாநில அளவிலான பெண்களுக்கான வூசு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக மாநில அளவிலான பெண்களுக்கான வூசு போட்டிகள் கோவை குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் அப்பாவு அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற போட்டிகளை,தமிழ்நாடு வூசு சங்கம் ,கோவை ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரி இணைந்து நடத்தினர்..
இதில், கன்னியாகுமரி, மதுரை,நாமக்கல்,திருச்சி,கோவை என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ஆதித்யா மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் சுந்தரபாண்டியன் நடராஜன் மற்றும் ஆதித்யா கல்வி குழுமங்களின் விளையாட்டு துறை இயக்குனர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..
சான்சூ,டாவுலு என இரு பிரிவுகளில் வூசு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள்,மற்றும் பதக்கங்களை மேற்கு மண்டல உணவு பாதுகாப்பு துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி கவுரவித்தார்..
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன், கோவை மாவட்ட வூசு சங்கத்தின் தலைவர் கணேசன்,மற்றும் வூசு சங்க மாநில நிர்வாகிகள் ரவி,தங்கபாண்டியன்,முபாரக் பாஷா,கோபி,சத்யபீமன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்..