விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு விழா விற்கு மாவட்ட தலைவர் சுந்தராசு தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் முருகன், மகளிர் அணி தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நகர தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.

தாசில்தார் யுவராஜ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் சட்ட ஆலோசகர் சுரேஷ் பிரபாகர் ,இணை மேலாளர் நந்தினி கவிதா, நிர்வாகி சின்னதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் . நகர துணை தலைவர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

Share this to your Friends