விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது
நகர தலைவர் பிரேம்குமார்(தெற்கு) வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ப.ஞான பண்டிதன் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ராஜா பேசும் போது,” நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே வாழும் பகுதியில் டாஸ்மார்க் நிறுவனத்தில் சார்பில் 14 மதுபான கடை உள்ளது. எலைட் ஷாப் என்ற வெளிநாட்டு மதுபானக்கடையும் உள்ளது.
ஹோட்டலுடன் செயல்படும் மதுப்பானக்கடைகள் 04 உள்ளது ரெக்ரேஷன் கிளப் ஒன்று உள்ளது. ஆக மொத்தம் அரசு அனுமதி பெற்று 20 மதுபான கடைகள் செயல்படுகிறது.
ஒரு நகராட்சியில் இந்தனை அரசு மதுபான கடைகள் இருப்பது உழைக்கும் மக்களையும் இளைய சமுதாயத்தையும் படிக்கும் மாணவர்களையும் விரைவில் மிகப்பெரிய குடிகாரர்களாக மாற்றவே உதவும்
இத்தனை கடைகளும் போதாது என்று புதிதாக ரெக்ரேஷன் கிளப் என்ற பெயரில் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் காமராஜர் நகரில் புதிகாக ஒரு மதுபான கடை அரசு அனுமதியோடு திறக்க இருப்பதை விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இருக்கும் மதுபான கடைகளை மூடக்கோரி பொதுமக்களும் மகளிரும் மக்கள் சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளும் கடுமையான போராடி வரும் வேளையில் புதிதாக மதுபான கடை திறக்கும் முடிவை மாவட்ட நிர்வாகவும் டாஸ்மார்க் நிர்வாகவும் தமிழக அரசும் கைவிட வேண்டும்.
இல்லையெனில் பாஜக சார்பில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை எற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்ன விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் ராஜா கூட்டத்தில் தெரிவித்தார். நடைபெற்று முடிவில் நகர தலைவர் (வடக்கு) சுரேஷ் நன்றி கூறினார்.