தேனி மாவட்டம் பெரியகுளம் – மதுரை ரோட்டில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பிரசிடென்சி மழலையர் பள்ளி மற்றும் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பில் விளையாட்டு தினம், பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடினர்.

இந்த முப்பெரும் விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,அன்னை வெல்ஃபர் அறக்கட்டளை நிறுவனருமான லயன்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்,தாய் தந்தை நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லயன். ராஜ்குமார் வரவேற்று பேசினார். மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தேனி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியில் கல்வி,ஒழுக்கம்,விளையாட்டு போன்றவைகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

பள்ளி முப்பெரும் விழாவை முன்னிட்டு விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,கிராமிய பாடல்,கும்மி பாட்டு,ஒயிலாட்டம்,வெஸ்டர்ன் டான்ஸ் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் சாரதா,பிரசிடென்சி மழலையர் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி,அறக்கட்டளை அறங்காவலர்கள் மோகனசுந்தரம்,ராஜேந்திரன்,லக்ஷ்மண குப்தா,அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,ராமு, விஜய் பிரபு , பள்ளி ஆசிரியைகள், பணியாளர்கள் ,அறக்கட்டளை பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் அறக்கட்டளை நிதி அறங்காவலர் சுகுமாரன் நன்றி கூறினார்.

Share this to your Friends