கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராமங்கள் தோறும் வலுவான பாசறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்கள் அணியை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு வாக்கு சாவடி மையத்திலும் ஒன்பது பேர் கொண்ட பூத்கழகம் அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஸ்டாலின் அரசு மக்களை சந்திக்க முடியாத நிலை உள்ளதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றசாட்டினார்.
அதனைத் தொடர்ந்து திமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இருந்து விலகி 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கழகத் துண்டு அணிவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விருதாச்சலம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.