தஞ்சாவூர் பிப்.15. தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன பொன்விழா அரங்கில் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான 3வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் சிராக் பஸ்வான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் NIFTEM-Tயின் நிர்வாகக் குழுவின் தலைவர் முனைவர் ஆர். எஸ். சோதி முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கும் NIFTEM-Tயின் இயக்குநர் முனைவர் வெ. பழனிமுத்து இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் பேசியதாவது, உற்பத்திக்கு பெயர் பெற்ற வளமான காவிரி டெல்டாவில் அமைந்துள்ள NIFTEM-T. இந்தியாவின் உணவுத் தொழில் மேம்பாட்டுக்கு ஆதரவாக உள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்.

உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான உணவுகளை தயாரிப்பதிலும் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் NIFTEM-T முக்கிய பங்காற்றி வருவதை சுட்டிக்காட்டிய அவர், பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து, உலகின் பெரிய பொருளாதார வர்த்தகமாக இந்தியா விளங்கி வருவதை மேற்கொள்காட்டிய அவர் உணவு பதப்படுத்தும் தொழில் விவசாயத்தையும் தொழில்துறையையும் இணைத்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கும் நுகர்வோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கும் உதவுவதாக அமைய வேண்டுமென தெரிவித்தார்.

மத்திய அரசு 2025-26ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையில் மற்றுமொரு NIFTEM நிறுவனம் உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டிய அவர் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் உணவு தொழில்துறை நிறுவனங்களின் வலுவான கூட்டமைப்பு. எதிர்காலத்திற்குத் தேவையான உணவு பாதுகாப்பை அமைப்பதே அரசின் நோக்கம்
உலகெங்கிலும் இந்திய தயாரிப்பில் உருவாகும் உணவு பொருட்களை சந்தை படுத்துதலை நோக்கமாக கொண்டு உணவு உற்பத்தியை மேம்படுத்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை (PLI) திட்டம், பிளம் கிசான் சம்பதா யோஜனா திட்டம் (PMKSY) மற்றும் உழவர் உணவு உற்பத்தியாளர் அமைப்புகள் சுய உதவிக் குழுக்களுக்காக (PM-FME) திட்டம் என பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் உணவு தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது என கூறினார்.

தஞ்சாவூரில் நடந்தப்படும் 31வது ICFOST கருத்தரங்கின் முதல் அறிவிப்பை AFSTI தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் முன்னிலையில் வெளியிட்டார். இந்த பட்டமளிப்பு விழாவில் உணவுத் தொழில்நுட்ப கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களும் இளறிலை முடித்த 60 பேருக்கும் முதுகலை முடித்த 28 பேருக்கும் மற்றும் முனைவர் பட்டம் முடித்த 2 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் பதிவாளர் பொறுப்பு முனைவர் எஸ்.சண்முகசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

Share this to your Friends