திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி‌. முத்து தலைமை தாங்கினார். தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலகம் மற்றும் இராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் ஏராளமான மாணவர்கள் இரத்த கொடையாளர்களாக பங்கேற்றனர்.

மேலும் ‘தேசிய நலனில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் முதல்வர் பா.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர்கள் டிகேஜி ஆனந்தன், சங்கர், கல்லூரி துணை முதல்வர் முனைவர் ராஜேஷ்குமார், திட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி ஷா, சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் உள்ளிட்ட செய்யாறு அரசு மருத்துவமனை குழுவினர் பங்கேற்றனர். இறுதியில் அனைவருக்கும் இரத்த கொடையாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Share this to your Friends