தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் பேரணியானது எஸ் ஆர் எம் அரசு மகளிர் பள்ளியில் இருந்து தொடங்கி நெடுஞ்சாலை வழியாக செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையை சுற்றியவாறு மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது நிகழ்ச்சியின் இறுதியில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வையும் உறுதி மொழியையும் கூறினார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் கைகளில் போதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பதாகைகளை ஏந்தியவாறு வாசகங்களை கோஷமிட்டவாரும் நடந்து சென்றனர்
இந்நிகழ்ச்சியில் குற்றாலம் ரோட்டரி கிளப் ஆஃப் சாதனா மற்றும் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் உதவி ஆய்வாளர் செல்வி எஸ் ஆர் எம் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்