மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பேசினார். இதில் செல்லப்பாண்டி உட்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.