கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை…….
நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பூ விவசாயி ராஜ்குமார் 55 இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் இவர் 2 லட்சம் ரூபாய் க்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ஒரு ஏக்கரில் செண்டு மல்லி பூ சாகுபடி செய்து வருகிறது
இது குறித்து விவசாயி ராஜ்குமார் கூறுகையில் ஓசூரில் இருந்து பூ நாற்று ஒன்றுக்கு இரண்டு ரூபாய்க்கு வாங்குவதாகவும் நிலத்தை தயார் செய்து நாற்று நடுவது மருந்து தெளிப்பது உரம் பராமரிப்பு என ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து பூ சாகுபடி செய்து வருவதாக தெரிவித்த அவர் நாள் ஒன்றுக்கு 50 கிலோவிற்கு மேல் செண்டு மல்லி பூக்கள் பறிக்கப்பட்டு சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் தற்போது போதிய விலை இல்லாததால் 20 கிலோ 40 கிலோ பூக்கள் மட்டுமே பறித்து சந்தைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்
நாற்று நட்டு 50 நாட்கள் கழித்து செண்டுமல்லி பூக்கள் பூக்கும் நிலையில் வாரம் இரண்டு முறை உரம் இடுவதாகவும் பண்டிகை காலங்களில் செண்டு மல்லி பூவின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகவும் சாதாரண நாட்களில் குறைவான விலைக்கு விற்பனையாவதாக வருத்தம் தெரிவித்தார் அதேபோல் பனிக்காலத்தில் பூக்கும் செண்டு மல்லி நாற்றுக்களை தாங்கள் நட்டு வைத்திருப்பதாகவும் தமிழக அரசு சென்று மல்லி பூக்களுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை சென்று மல்லி பூ விற்பனையானால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரம் மேம்படுமென்று அவர் தெரிவித்துள்ளார்