திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா, ராதா திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, எடுத்து வந்து அக்னிஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வசனம் மாலை மாற்றுதல் எஜமானர் சங்கமம் கன்னியாஸ்தானம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க மேலத்தாளத்துடன் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா, ஆகியோருக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெறறு
மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருக்கல்யாணம் வைபவத்தில் திருமணமாகாத மற்றும் திருமணம் தள்ளிபோகும் உள்ளூர் மற்றும் வெளியூரைசேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜைசெய்தும்,7சப்த மாதா கன்னிகளுக்கு மஞ்சள் கயிர், மலர்த்தூவி திருமண பிரார்த்தனை செய்து கொண்டனர்.

திருக்கல்யாண வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Share this to your Friends