மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ, மற்றும் பி எஃப் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 180 க்கும் மேற்ட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு மாதாந்தோறும் ஊதியம் முறையாக வழங்கபடாதது உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன்குமார் தலைமையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை எண் 62 இன் படி நாளொன்றுக்கு 628 ரூபாய் வழங்க கோரியும், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையை வழங்க வலியுறுத்தியும், பணியின் போது பயன்படுத்த கையுறை,காலுறை, முக கவசம் மற்றும் தரமான வாகணங்கள் வழங்க வேண்டும், கொரோனா பெருந்தொற்றின் போது பணியாற்றியதற்கான சிறப்பு ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இரண்டு நாட்களாக போராடிய நிலையில் இதுவரை தங்களிடம் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால் நாளை குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வதாக அறிவித்து கலைந்து சென்றனர்.