பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சையது அபுதாஹிர் ,மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் அப்துல் கனி,மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு மசோதா நகலை கிழித்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் அதனை தடுத்தனர்,இதில் அக்கட்சியின் மாவட்டப் பொருளாளர் முகையதீன் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.