அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு சட்ட விரோதமாக இந்தியர்களை வெளியேற்றி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தியர்களை பாதுகாக்கவும் மனித உரிமையை மீறுவதாகவும் அமெரிக்க அரசையும்,இந்திய ஒன்றிய அரசை கண்டித்தும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் (பிப்-13) CITU பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
CITU மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை குற்றவாளிகளைப்போல கைவிலங்கிட்டு வெளியேற்றும் பிற்போக்குத்தனத்தை விட்டொழிக்க வேண்டும், அமெரிக்கவாழ் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய ஒன்றிய அரசு உறுதிசெய்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாயிலாக அவர்கள் வலியுறுத்தினர்.