மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ கொடியேற்று விழா மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது.


அன்று இரவு முதல் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர் சந்திரசேகரர் உற்சவங்களும், தொடர்ந்து மார்ச் 3ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் சுற்றுக் கோயில் கொடியேற்றம் ஆகி, அன்று இரவு முதல் மார்ச் 12ம் தேதி வரை காலை, இரவு இருவேளைகளிலும் 4 சித்திரை வீதிகளும் அம்மனும், சுவாமியும் வீதி உலா பின்னர் கோயில் வந்து சேர்த்தியாவர். மார்ச் 22ம் தேதி அன்று பிரதானக் கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெற்று உற்சவம் நிறைவடையும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் பேஷ்கார் காளிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Share this to your Friends