திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்கு
பழனி பாபா அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மாவட்ட பொறுப்பாளர் சைமன் ஜஸ்டின் மண்டல செயலாளர் பழனி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கபட்டு இருந்தது.
இந்நிலையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பழனியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என தொடர்ந்து சாதி மத ரீதியாக மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பேசி வருவதாகவும் ,தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசி வருகிறார் ,பிப்ரவரி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கெ சென்ற பெரியார் உணர்வாளர்கள் மீது நாம் தமிழ்ர் வன்முறையில் ஈடுபட்டனர்.
சீமான் அவர்களை உயர்நீதி மன்றம் இதுபோல் வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று அவரை எச்சரித்து இருக்கின்றது. எனவே பழனி பகுதியில் தலித் மற்றும் இசுலாமியர் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கினால் பழனியில் சட்டம் ஒழுங்கு பிரச்சணைகள் ஏற்படும் சூழல் அதிகமாக இருக்கின்றது இதனால் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.