மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த தோரண வாயில் நேற்றிரவு இடிக்கப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடுகள் ஜே. சி. பி. இயந்தி ரம் மீது விழுந்ததில், அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, நக்கீரர் தோரண வாயில் மற்றும் கே.கே. நகரில் எம். ஜி. ஆர்., ஜெயலலிதா சிலைகள் பின் பகுதியில் உள்ள பெரியார் தோரண வாயில் ஆகியவை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால், அவற்றை இடித்து அகற்றவோ, அல்லது விரிவுபடுத்தவோ உத்தரவிடக் கோரி, சில மாதங்களுக்கு முன்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு – தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசா ரித்த ஐகோர்ட் கிளை, மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்ததன் நினைவாக, தோரண வாயில்கள் 43 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளன.

தற் போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இவற்றின் தூண்கள் சாலையின் நடுவே இடை யூறாக அமைந்துள்ளன. தோரண வாயில் தூண்களின் பின்பகுதியை சிலர் பிளாட்பார சிறிய உணவு கடைகளாக பயன்படுத்துகின்றனர்.


எனவே, 6 மாதங்களுக்குள் மதுரை மாட்டுத்தாவணி நக்கீரர் தோரண வாயில் மற்றும் கே.கே நகர் பெரியார் தோரண வாயில் ஆகியவற்றை அகற்ற மதுரை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவில் தோரண வாயில்கள் அமைத்துக் கொள்ளலாம் என, கடந்த ஆண்டு செப்.22ம் தேதி உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே நக்கீரர் தோரண வாயில் இடிக்கும் பணிகள் நேற்றிரவு தொடங்கியது.

இதற்காக அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப் பட்டது. ஜே.சி.பி. டிரைவரான மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த நாகலிங்கம் (25) இடிக்கும் பணிகளை தொடங்கினார். அப்போது தோரண வாயிலின் நீளமான மேல்பகுதி முழுவதுமாக பெயர்ந்து, ஜே.சி.பி.யில் அவர் அமர்ந்திருந்த இடத்தின் மேல் பகுதியில் விழுந்து நசுக்கியது.

இதில் படுகாயமடைந்த நாகலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் அருகே, மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டிருந்த இந்த பணிகளுக்
கான ஒப்பந்ததாரரான மதுரை கோ.புதூர் சம்பக் குளம் பகுதியை சேர்ந்த நல்லதம்பி(55) மீதும் இடி பாடுகள் விழுந்தது. இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த தல்லாகுளம் தீய ணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய ஜே.சி.பி. யில் இருந்த நாகலிங்கத்தின் உடலை நீண்ட நேர போராட்டத் திற்கு பின் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Share this to your Friends