மதுரை
மதுரை பீ.பீ.குளத்தில் சலவை தொழிலாளர் பேரவை சார்பாக வெள்ளாவி பொங்கல் விழா நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று அய்யனார் கோவிலில் சிறப்பு தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனர். மேலும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பழம், கிடா கறி வழங்கப்பட்டது.
இதில் தலைவர் எஸ்.ஆர் சோனைமுத்து, செயலாளர் தமிழ்ச்செல்வம், பொருளாளர் எஸ்.ரமேஷ், துணைத் தலைவர் சங்கிலி, துணைச் செயலாளர்கள் எம்.பாண்டி, பி.குமார் கமிட்டி தலைவர் எம்.ராஜூ,அறிவிப்பாளர் ஆறுமுகம், சங்க ஆலோசகர்கள் ராமமூர்த்தி, ராமர், ஜெயக்கொடி, முருகேசன், பாண்டி செல்வராஜ், முத்துலிங்கம் உள்பட சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.