தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். காலை 10- மணிவரை வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டு சென்றனர்.

தாராபுரம்,குண்டடம், மற்றும் வேங்கி பாளையம் மற்றும் புறவழிச் சாலை பகுதியில் அதிகாலை முதல் 10 மணி வரை பனிமூட்டத்தால் சூழ்ந்தது இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.

கூறுகையில், மார்கழி மாதம் என்றால் பனி. ஆனால் வழக்கத்திற்கு மாறாக தை மாதத்தில் இந்த அளவிற்கு பனி மூட்டத்தை நாங்கள் பார்த்ததில்லை. மிகவும் சிரமமாக உள்ளது.

நாங்கள் கட்டுமான பணி செய்து வருகிறோம் காலையில் எழுந்தவுடன் அதிக பனிமூட்டம் மற்றும் குளிர்காலமாக வழக்கமாக செய்யும் நேரத்தை விட தாமதமான நேரத்தில் வேலையை தொடங்க வேண்டியுள்ளது.

இதனால் கட்டிட பணிகள் விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றன மேலும் தாராபுரம் பகுதியில் 6700 ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது கடும் குளிர்படியின் காரணமாக நெற்பயிர்கள் தலைதூங்கி காணப்படுகின்றன மேலும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக எங்களது அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்தார் .

Share this to your Friends