மதுரை
“மனித உரிமை போராளி” விருது பெற்ற தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேலு அவர்களுக்கும், “மதிப்புறு முனைவர் பட்டம்” பெற்ற அமைப்பின் மாநில பார்வையாளரும், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரருமான ஆர்.ராமன் ஆகியோருக்கு பாராட்டு விழா மதுரையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முருகேசபாண்டி வரவேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் டாக்டர் கஜேந்திரன், கீதாமுருகன், டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார், குருலட்சுமி, ஆசிரியர் மாணிக்கராஜ், மலர்விழி, உமா மகேஸ்வரி, பழனிவேல், விவேகானந்தன், பொன்முருகன் உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.