மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள் சம்பந்தமாக பிப்ரவரி 6 தேதி அன்று ஜாண் பாண்டியன் நியூஸ் 360 சேனலுக்கு அளித்த பேட்டியில் தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்று கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பி கலவரத்தை துண்டும் வகையில் பேசியதை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் – இந்துக்கள் – கிருஸ்துவர்கள் ஆகிய மூன்று சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் இஸ்லாமியர்களின் மத நம்பிகைக்கு எதிராக சர்ச்சை குறிய பேச்சுக்களை பேசி கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வோர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பா ஜ க கூட்டனியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் சர்ச்சை குறிய பேச்சுக்களை தான் பேசுவார்கள் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆகவே. இது போன்று சர்ச்சை குறிய பேச்சுக்களை ஒரு போதும் தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் ஏனென்றால் இது பெரியாரின் மண்
தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்று கொள்வார்களா என்று கலவரத்தை துண்டும் வகையில் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜாண் பாண்டியன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.