தாராபுரம் அருகே பரபரப்பு.சம்பவம் ஜாமீனில் வந்த அண்ணன்-தம்பியை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த ஐந்து பேர் தாராபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சரணடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம், அருகே கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தந்தையை கொன்றதற்கு பழிவாங்க ஜாமீனில் வந்த.அண்ணன்-தம்பியை கார் ஏற்றிகொல்ல முயன்ற சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குட்டறைப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன்கள் சந்திரசேகர் (வயது 29) மற்றும் அசோக்குமார் (31). இதில் சந்திரசேகர் மீது கொலை, கொலை – முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. அசோக்குமார் மீது 4- வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரசேகர், அசோக்குமார் ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்று திருப்பூர் பகுதியில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று வக்கீல் வரச்சொன்னதால் சந்திரசேகர், அசோக்குமார் மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகிய 3 பேரும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது மோட்டார் சைக்கிள் திருப்பூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் குண்டடத்தை அடுத்துள்ள இடையன்கிணறு தனியார் எண்ணெய்மில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் கொலை செய்யப்பட்ட நாகராஜ் மகன் -சிவக்குமார் மற்றும் 5-பேர் இருந்தனர். அந்த கார் திடீ ரென்று சந்திரசேகர், அசோக் குமார் மற்றும் சிறுவன் சென்ற மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளியது.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடி அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்து கொண்டு 100-க்கு போன் செய்தனர் உடனடியாக குண்டடம் போலீசார் அந்த இடத்திற்கு சென்று காயத்துடன் இருந்த சந்திரசேகர், அசோக்குமார் மற்றும் சிறுவனை மீட்டனர். காரில் சென்று மோதிய சிவக்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தந்தையை கொன்றதற்கு பழிவாங்க ஜாம்னில் வந்தவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் குற்றவாளிகள் கிடைக்கவில்லை இந்த நிலையில் இன்று மாலை தாராபுரம் நடுவன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நாகராஜ்,செல்வகுமார்,நிதீஷ் குமார், அருண்குமார் ,
பாரத்பாண்டியன், ஆகிய ஐந்து பேரும் தாராபுரம் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவன் நீதிமன்ற நீதிபதி திருமதி உமா மகேஸ்வரி முன்பு சரணடைந்தனர். சரணடைந்த ஐந்து பேரையும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போலீஸ் வாகனத்தில் ஏற்றி கோவை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர் இதனால் தாராபுரம் கோர்ட் வளாகத்தில் இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this to your Friends