உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

நாளை 15-வது நாளாக தொடரும் உயர்மின் எதிர்ப்பு இயக்க போராட்டம்!…

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம் தூரம்பாடி வரை டாடா நிறுவனம் அதேபோல தூரம்பாடி,பாப்பா வலசு பகுதியில் ஜே எஸ் டபிள்யூ (jsw) ஆகிய இரு நிறுவனங்களும் விவசாயிகள் விலை நிலத்தில் விவசாயிகளின் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைத்து வருகிறது.

இதனை கண்டித்து வேலப்பநாயக்கன் வலசு, எரசனம்பாளையம், கருப்பன்வலசு, தூரம்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக தொடர்ந்து அவர்களது கிராமத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

அதற்கு முன்னதாக தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு மாலை அழைத்து இருந்தனர். அப்போது விவசாயிகள் 300 பேர் திரண்டு வந்திருந்தனர் ஆனால் டாடா நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டும் பேச்சு வார்த்தைக்கு வந்திருந்தனர். ஆனால் ஜே எஸ் டபிள்யூ. நிறுவனத்தினர் வரவில்லை இதனால் தாசில்தார் திரவியம் முன்பு நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர் அதுவரை தற்காலிகமாக மின்பாதை அமைக்கும் பணியினை நிறுத்தி வைப்பதாக வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் வாக்குறுதி அளித்தனர்

இதுகுறித்து மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில்:-

இதனால் நாங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து கலைந்து சென்று தொடர்ந்து எங்களுடைய ஏரசனம்பாளையம்.மற்றும் பாப்பாவலசு பகுதியில் காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருக்கிறோம் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this to your Friends