கண்டமங்கலம்
கண்டமங்கலம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே கேட் அருகாமிலேயே இரு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சர்வீஸ் சாலை வழியாக சின்ன பாபு சமுத்திரம், பெரிய பாபு சமுத்திரம், கலித்திரம்பட்டு, நவமால் காப்பேர்,ஆழியூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது இக்கிராமங்களில் இருந்து சர்வீஸ் சாலை வழியாக அங்குள்ள ரயில்வே கேட்டை கடந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் மருத்துவமனை விவசாய கூட்டுறவு வங்கி அங்கன்வாடி அலுவலகம் வட்டார கல்வி மையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் ஆனால் இங்குள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளதால் மேம்பாலம் வழியாக சுற்றி வர வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.
அதனால் அப்பகுதி பொதுமக்கள் மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே கேட்டை திறக்க கோரி நெடுஞ்சாலைத்துறை இடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் திறக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ரயில்வே கேட்டை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அரசியல் கட்சியினர் பொதுமக்கள் ஆகியோரிடம் விழுப்புரம் வட்டாட்சியர் தலைமையில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சமாதான பேச்சு வார்த்தையில் வட்டாட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து போராட்டக் குழுவினரிடம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளிக்குமாறு வட்டாட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போராட்டக் குழு மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். போராட்ட குழு சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் அப்பகுதியில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.