மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு:-
மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடி, நாகங்குடி, திருநன்றியூர், ஆத்துக்குடி, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில், குன்றத்தூர், பாகசாலை வழியாக தேத்தாக்குடி செல்லும் மார்க்கத்தில் mofussil பேருந்து சேவை மட்டும் இயக்கப்படுவதால் இப்பகுதி பெண்கள் மகளிருகான இலவச பேருந்து சேவை பெரும் வகையில் இலவச பேருந்து சேவையை அனுமதிக்க கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்தனர்.
மேலும் சீர்காழியை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள வாய்க்காலின் குறுக்கே இணைப்பு பாலம் கட்டித்தர வலியுறுத்தியும் அவர்கள் மனு அளித்தனர்.