தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்..
2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில் அதிக கவனம் பெற்று வருகிறது. இதன் மூலம் உருவாகும் நன்மைகளை பயன்படுத்தி தமிழக அரசின் விண்வெளி தொழில் பூங்கா திட்டம் மற்றும் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2024 விரைவில் வெளியிடப்பட்டத்தை தொடர்ந்து காஸ்மிக் போர்ட் ஸ்டார்ட் அப் நிறுவனம் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தூத்துக்குடியில் தன் தலைமையகத்தை நிறுவியுள்ள முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் ஆக மாறி உள்ளது.
காஸ்மிக்போர்டு ஸ்டார்ட் அப் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி சேர்ந்த லிவா அமுதன் மற்றும் நவீன் வேலாயுதம் ஆகியோர்களால் இணைந்து நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடங்கிய காலத்தில் இருந்து சொந்த நிதி உதவியுடன் இயங்கி வரும் நிலையில் தற்போது முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை உருவாக்கிய நவீன் வேலாயுதம் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “உலகம் முழுவதும் விண்வெளி தொழில் வளர்ந்து வரும் இந்த நிலையில் இந்த வளர்ச்சியை என் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.
கடற்கரை ஒட்டிய தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த நான் குலசேகரப்பட்டினத்தில் உருவாகும் புதிய ஏவுதளம் காரணமாக இந்த கனவை மிக ஆழமாக உணர்ந்துள்ளார். இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் போட்டி திறன் உடையதாக செலவினங்களை குறைக்க மற்றும் மறு பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க மெத்தலாக்ஸ் எரிபொருள் இயக்கம் தொழில்நுட்பம் தேவை. இந்த தொழில்நுட்பம் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுவதற்கும் மீள் பயன்பாட்டிற்கும் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் தமிழகத்தை உலக அளவில் மிளிர செய்யவும் (ISRO) பங்களிப்பை கண்டு பெருமைப்படும் நோக்கில் கிரகங்கள் இடையேயான பயணங்களை மற்றும் அதற்கான தயாரிப்புப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளோம்.
காஸ்மிக் போர்டு தற்போது 1.4 ஏக்கர் பரப்பளவில் 15 ஆயிரம் சதுர அடி கொண்ட ஒரு உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தூத்துக்குடியில் கட்டமைத்து வருகிறது.
2025 ஜூன் மாதம் திறக்கப்பட உள்ள இந்த மையம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களின் மையமாக விளங்கும். இந்த பொறியாளர்கள் IPRC மகேந்திரகிரி VSSC,LPSC திருவனந்தபுரம் மற்றும் URSC பெங்களூருவில் பணியாற்றிய ISRO- முன்னாள் விஞ்ஞானிகள் வழிபாட்டுதல்படி செயல்படுகின்றனர்..
காஸ்மிக் போர்ட் தற்போது இந்தியாவின் முதல் மெத்தலாக்ஸ் மூலம் இயக்கப்படும் ராக்கெட் எஞ்சின் உருவாக்கத்தில் முன்னணியில் உள்ளது. எங்கள் mech blue சிறிய செயற்கை கோள் ஏவுவதற்கான ராக்கெட் CRYONX இன்ஜின் உருவாக்கும் பணியில் முதல் படிநிலைகளை கடந்து சிறிய அளவிலான இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இதன் செயல் திறனை 15 முறை சோதித்து ஒவ்வொரு முறையும் 10 வினாடி நீடித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகள் காஸ்மிக் போர்ட் அப் நிறுவனம் தலைமை இடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முக்கிய செயல்பாடுகள் (வால்வு இயக்கம், எரிபொருள் தீப்பற்றுதல் மற்றும் இயந்திர நிறுத்தம்) தொலைவில் உள்ள ஒரு கட்டுப்பாட்டா அரையிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. மேற்படி பரிசோதனைகளின் போது கடல் மட்டத்திலேயே 125 நியூட்டன் உச்ச விசையும், 220 வினாடி சிறப்பு மொத்த ஆற்றலும் பெறப்பட்டது. இந்த வெற்றிகரமான பரிசோதனை பயணம் முழு அளவில் இன்ஜின் மேம்படுக்கான ஒரு முக்கிய மயில் கல்லாகும். விண்வெளி ஏவுதல கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இது ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
காஸ்மிக் போர்ட் தனது புதிய உந்துதல் தொழில்நுட்பம் சிறப்பான அமைப்பு மற்றும் விண்வெளி துறையில் அனுபவமுள்ள குழுவினரை கொண்டு இந்திய தனியார் விண்வெளி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகவும் மற்றும் தனியார் விண்வெளி தொழிலில் தமிழகத்தை ஒரு முதன்மையான மாநிலமாக மாற்றி வருகிறது…