விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வி.சி.சந்திரகுமார் நேரில் சந்தித்து தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார். மேலும், வி.சி.சந்திரகுமாருக்கு சால்வை அணிவித்து கனிமொழி கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.