கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல் தேனி மாவட்டம் கூடலூர் திருஅருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை கூடலூர் கிராமச் சாவடித்தெரு பூங்காபள்ளி மேல்புறம் அமைந்துள்ள தருமச்சாலையில் 100 கற்கும் மேற்பட்ட முதியோர்கள் ஆதரவற்றோர் அவர்கள் பசியின்றி வாழ வேண்டும்
என்ற நல்ல எண்ணத்தில் தினந்தோறும் உணவு வழங்கும் தொண்டு நிறுவனமாகும் இந்த நிறுவனம் இந்த தரும சாலையின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் அவர்கள் சொந்த பணத்தில் இருந்து வழங்கும் சிறந்ததொரு தருமசாலையாகும் இந்த இல்லத்தில் நாளை நடைபெற உள்ள தைப்பூச திருநாளை முன்னிட்டு தரும சாலையின் தலைவர் கம்பம் புதுப்பட்டி கெங்குவார்பட்டி ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர் சா இளங்கோவன் தருமசாலை வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் தைப்பூசத் திருநாள் கொடியேற்றி வைத்து அங்கு வந்த அனைத்து முதியோர் மற்றும் பெண்களுக்கு உணவுகள் வழங்கி இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் தருமசாலையின் செயலாளர் கோபால் பொருளாளர் கே பாண்டி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மகேந்திரன் கே எஸ் சரவணன் உள்ளிட்ட ஆன்மீக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்