தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்று திரவிய ஹோமம், மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பட்டாளம்மன் விமானம், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கலசத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்து பூஜை செய்யப்பட்டு புனித நீரை ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.

பின்னர் ஸ்ரீ பட்டாலம்மன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை கோவில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Share this to your Friends