பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா.
பெரம்பலூர்.பிப். 09. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 21.00 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய இ-சேவை மைய கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசாமி, ராஜ்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.இராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.