தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் நாள் சொற்பொழிவாற்றிய புலவர் மு.விவேகானந்தன் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆலய அர்ச்சகர் சர்க்கரை செல்வம் அவர்களுக்கும் வேளாக்குறிச்சி ஆதீன திருமடம் ஸ்ரீலஸ்ரீ இளவரசு சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சிக்கு தலைமை இசைப்பிரிய அமைப்பு தலைவர் ஜெயபால் அவர்களும், முன்னிலை ஆன்மீக ஆனந்த நிறுவனத் தலைவர் கனகராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தியாகராஜசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் பலர் பாராட்டி உரையாற்றினர்.

Share this to your Friends