எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு.
மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்,மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில, மாவட்ட, நிர்வாகிகள்,உலமா பெருமக்கள்,
ஜமாத்தார்கள், ஜனநாயக சக்திகள் முண்ணனி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில்,எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர்
நஸ்ருதீன்,ஃபாத்திமா கனி (மாநில தலைவர்,விமன் இந்தியா மூவ்மெண்ட்)
மௌலவி சபூர் முகையதீன் (மதுரை அரசு டவுன் ஹாஜியார்)
வழக்கறிஞர் பிஸ்மில்லா கான் (முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப் பாளர்) மௌலவி எஸ்.சதக்கத்துல்லா (மதுரை மாவட்ட தலைவர் ஜமாத் உலமா)
மதுரை, எக்கனாமிக்கல் சேம்பர் மூத்த நிர்வாகி ஏ.கே.ஜமான்,
ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
மேலும்,. இந்நிகழ்வில்,எஸ். டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக்,சுப உதயகுமார் (தமிழக வாழ்வுரிமை கட்சி)எஸ். டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர்நிஜாம் முகைதீன்,எஸ். டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர்,நஜ்மா பேகம் மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் சத்தியபிரபு செல்வராஜ் (சமூக செயற்பாட்டாளர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.