சத்தியமங்கலம் பு. புளியம்பட்டி கே வி ஐ சி. தொழிற்பயிற்சி தச்சுத் தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா அகில இந்திய விஸ்வகர்ம பேரவையும் கே வி ஐ சி தொழிற் பயிற்சி அமைப்பு சத்தி சர்வோதயா சங்கமும் இணைந்து நடத்தும் தொழிற்பயிற்சி புளியம்பட்டியில் துவக்க விழா நடைபெற்றது
விழாவிற்கு அகில இந்திய விஸ்வகர்ம பேரவையின் செயலாளர் ஆர் மூர்த்தி தலைமையில் தலைவர் ஆர் கணேசன் முன்னிலையில்சிறப்பு அழைப்பாளர்களாக கே வி ஐ சி அதிகாரி கலிமுல்லா,சத்தி சர்வோதய சங்க செயலாளர் முருகானந்தம், ஆலம்பாளையம் கூட்டுறவு வங்கி மேலாளர் நாகராஜ், புஞ்சைபுளியம்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணை மேலாளர் பிரவீன், எஸ் எம் கே எஜுகேஷன் பவுண்டேஷன் என் ஜி ஓ டாக்டர் சக்தி மோகன் கலந்து கொண்டனர் இதில் கே வி ஐ சி பயிற்சி பற்றிய விளக்கங்களும் அதில் கலந்து கொண்ட 20 பேர்களுக்கான திட்டங்களையும் வகுப்புக்கான நடைமுறைகளையும் எடுத்துக் கூறினர் 20 பேரும் கலந்து கொண்டு கேட்டறிந்து வகுப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இந்த 20பேருக்கும் பயிற்சி அளிக்க கொல்கத்தாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பயிற்சியாளர்கள் வருகை தந்துள்ளனர் தச்சு கலைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள இந்த பயிற்சி பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர்