எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சீர்காழி தனியார் பள்ளி மாணவி சாதனை.
2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளானது இன்று வெளியானது.மயிலாடுதுறை மாவட்ட அளவில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் பயிலும் ஜெஸ்மியா என்ற மாணவி 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும்,மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இதேபோன்று இரண்டாம் இடத்தையும் அதே பள்ளி மாணவி மதுஷா பிடித்துள்ளார்.மாணவிகள் ஜெஸ்மியா மற்றும் மதுஷா பள்ளிக்கு பெற்றோருடன் வருகை புரிந்தனர்.அப்போது மாவட்டத்தில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சந்தனமாலை,பரிவட்டம் கட்டி மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்டத்தில் முதலிடமும்,மாநில அளவில் மூன்றமிடம் பிடித்து மாணவி பெற்ற மதிப்பெண்கள்
தமிழ் -99
ஆங்கிலம்-98
பொருளியல்-100
வணிகவியல்-100
கணக்கு பதிவியல்-100
கணிணி பயன்பாடுகள்-100
அதே பள்ளியில் பயின்று வந்த மதுஷா 596 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
தமிழ் – 98
ஆங்கிலம் – 99
பொருளியல் – 99
வணிகவியல் -100
கணக்கு பதிவியல் – 100
கணிணி பயன்பாடுகள் – 100
மாணவிகள் பாராட்டு விழாவில் பள்ளி தாளாளர் ராஜ்கமல் முதல்வர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஜெஸ்மியா பேசுகையில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்க காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் மேலும் அரசுத்துறை தேர்வு எழுதி மக்களுக்கு பணி செய்ய ஆசைப்படுவதாக கூறினார்.