தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி.
தாராபுரம்
தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100சதவீகிததேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்2தேர்வை 225 மாணவர்கள் எழுதினார்கள். 225 மாணவர்களும் தேர்ச்சி பெற்ற 100 சதவீத தேர்ச்சியை தொடர்ந்து 30 ஆண்டுகளாக பெற்று வருகின்றனர்.
பள்ளி மாணவி தார்னிகா 494 மார்க் பெற்று பள்ளியில் முதலிடம் பெறுகிறார்.பாடவாரியாக மாணவி பெற்ற மதிப்பெண் விவரம் தமிழ் 98, ஆங்கிலம் 98, இயற்பியல் 99, வேதியல் 99, கணினி அறிவியல் 100, கணிதம் 100.
பத்மசரண் 593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் சுஜிதா,பரத், இருவரும் 590மார்க் பெற்று பள்ளியில் மூன்றாம் இடமும் வகிக்கின்றனர்.
45 பேர் ஒரு பாடத்தில் 100 க்கு100ம்,7 பேர் இரண்டு பாடத்தில் 100 க்கு100மூன்று பாடத்தில்3பேர் 100க்கு100 பெற்றுள்ளனர்.
590க்கு மேல் 4பேரும் 580 க்கு மேல் 19பேரும், 570க்கு மேல் 26 பேரும், 560 க்கு மேல் 21 பேரும் 550க்கு மேல் 18 பேரும் மார்க் பெற்றுள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை படைத்தவர்களை ஸ்ரீ பொன்னம்மாள் தங்கவேலு
கல்வி மற்றும் கருணை அறக்கட்டளை கரஸ்பாண்டெண்ட் மனோன்மணி ஆறுச்சாமி, மேனேஜிங் டிரஸ்டி ராமசாமி, சேர்மன் மோகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுஜாதா பாஸ்கர், பாலகிருஷ்ணன், ராம்குமார், பள்ளியின் முதல்வர் வீரராஜ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.
படம் பொண்ணு
படவிளக்கம் தாராபுரம் பொன்னு மெட்ரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.