தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் அலகு அமைக்க மானியம் பெறலாம்..

தாராபுரம்,

தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் அலகு அமைக்க மானியம் பெறலாம்.. தமிழ்நாட்டில் குறைந்தபட்ச பதனிடும் முறைகள் (Minimal processing) விவசாயம் மற்றும் உணவுப் பதனிடும் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.”Minimal processing” என்றால், அது ஒரு உணவு பதனிடும் முறையை குறிக்கிறது. இந்த முறையில், உணவுப் பொருள்களை அதிக வெப்பம் இல்லாமல் பதனிட்டு, அவற்றின் சத்துக்கள் மற்றும் தரத்தை பாதுகாக்கும் ஒரு முறையாகும். இந்த முறையில், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை பதனிட்டு, அவற்றின் பச்சைப் தன்மையை முடிந்தவரை தக்கவைக்க முடியும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவி வெட்டி துண்டுகளாக பிரித்து பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைப்பது என்பது ஒரு குறைந்தபட்ச பதனிடும் முறைக்கு ஒரு உதாரணமாகும்.

பழச்சாறுகளை தயாரிப்பது, பாட்டில் அடைப்பது, மற்றும் மசாலா சேர்த்து உணவு தயாரிப்பது ஆகியவை குறைந்தபட்ச பதனிடும் முறையின் ஒரு பகுதியாகும்.

உணவின் சத்துக்கள் மற்றும் தரத்தை தக்கவைக்கிறது, உணவின் பாழ்படுதலை குறைக்கிறது, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்கிறது.

இந்த குறைந்தபட்ச பதப்படுத்தும் அலகு (Minimal Processing Unit) அமைக்க தோட்டக்கலை துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 35 சதவீதம் கடன் இணைக்கப்பட்ட மானியமாக ரூ 12.25 இலட்சம் வரை பெறலாம். இத்திட்டத்தில் பயனடைய மற்றும் விவரங்கள் பெற மூலனூர் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகம் மற்றும் கீழ் கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 9385794707,8838508679.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *