மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!

ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!!
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழா வாகும்.
இந்தாண்டு மீனாட்சிசுந் தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாகடந்த ஏப்ரல் 29 ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு 12 அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 9ஆம் நாள் நிகழ்வாக திக்கு விஜயமும் நடை
பெற்றது.
சித்திரை திருவிழாவின் 10ம் நாள் நிகழ்வான விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும் அம்மனும், நான்கு சித்திரை வீதிகளை சுற்றி வலம் வந்தனர் . அப்போது திருக் கல்யாண மேடையில் திருமுறைகள் ஒதுவார்களால் பன்னிரு ஓதப்பட்டது. பின்னர் கோவில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில்நறுமணம் மிக்க வெட்டி வேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களா லும், பச்சரிசியாலும், நவ தானியங்களாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்த ரேசஸ்வரர் பிரியா விடையுடனும் தனி தனியாக எழுந்தருளினர்.
திருக்கல்யாண மேடையில் சுப்பிரமணியசுவாமி தெய் வானை யுடனும் பின்னர் மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரரும் மேடைக்கு வந்த பின்னர் பவளக் கனிவாய் பெருமாளும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினார்.
திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளக்கனி வாய் பெருமாளும் சுந்தரேஸ்வரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடனும் எழுந்தருளினர்.இதனையடுத்து தனது தங்கையான மீனாட்சியம்மனை பவளக் கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ் வும் நடைபெற்றது.
‘தொடர்ந்து மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிர திநிதிகளாக இருந்து சிவாச் சாரியார்கள் மாலை மாற் றும் வைபவம் நடைபெற்றதையடுத்து.
வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு
மங்கல வாத்தியங்கள் இசைக்க வெகு விமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மிதுன லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது.