தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை
தாராபுரம் விவேகம் பள்ளியில் மாநில அளவில் மாபெரும் சாதனை பெற்றுள்ளார்கள். சாதனைகளில் மேலும் ஒரு மைல்கல்லாக பள்ளி அளவில் 598 /600 மதிப்பெண்கள் பெற்று கே. கிருஷ்ணபிரியன் நான்கு பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுப் பொறியியல் கட் ஆப் 200 / 200 க்கு எடுத்து முதலிடமும் 597/ 600 மதிப்பெண்கள் பெற்று ஆர். ரஞ்சித் இரண்டாமிடமும் 592/ 600 மதிப்பெண்கள் பெற்று கே. தான்யஸ்ரீ மூன்றாமிடமும் பள்ளியில் 72 சதங்கள் எடுத்தும் மாணவர்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
விவேகம் பள்ளியில் இக்கல்வியாண்டிலும் மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுச் சாதனைப் புரிந்துள்ளனர். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விவேகம் பள்ளியின் தாளாளர் முனைவர் ஆர். சுப்பிரமணியன் செயலாளர் முனைவர் கே. பூபதி மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.