கொளத்தூர் ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலையில் விநாயகபுரம் பஸ் நிலையம் புதிய கட்டிடத்தின் பணி துவக்கமாக பூமி பூஜை நடைபெற்றது.
விநாயகபுரம் பேருந்து நிலையம் நிழற்குடை இல்லாமல் கடும் வெயிலிலும் , மழையிலும் பேருந்து பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உண்டானார்கள்.
இதனை சீரமைப்பு செய்ய வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை கட்டிடமாக கட்டி அதில் ஓட்டுநர் ஓய்வு அறை, நேரக் காப்பாளர் அறை ,பெண்கள் பாலூட்டும் அறை , கழிவறை,மற்றும் நிழற்குடைகள் அமைத்து பஸ்கள் நிறுத்தும் இடமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பணிகள் துவக்க நிகழ்வாக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் முன்னிலையில் மண்டல குழு தலைவர் நந்தகோபால்,
மாதவரம் மண்டல அதிகாரி திருமுருகன், பொறியாளர்கள் கார்த்திகேயன், முத்தழகு உதவி செயற் பொறியாளர்கள் அகமது அஸ்தக், ஜெயலட்சுமி ஆகியோரின் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் திருமலை துரைசாமி, ஏழுமலை வட்டகழக செயலாளர் சுந்தரம் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.