தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா புத்தக வெளியீட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது

சுருளி அருவி அருகே கடந்த 2011 ஆம் ஆண்டு காதல்ஜோடிகளான எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர் இந்த வழக்கில் கொலை குற்றவாளியை கைது செய்து இந்த வழக்கை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்த நிலையில் இந்த வழக்கில் சட்டம் போராட்டம் நடத்தி உண்மையான குற்றவாளிகளுக்கு தீர்ப்பு பெற்றதாக உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் சமூக அலுவலர்கள் காவல்துறையினரை கவரவிக்கும் விதமாக கோட்டுரில் காதல் ஜோடிகள் குறி தந்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 2011 இல் அருவி இரட்டை படுகொலையும் சட்டப் போராட்டமும் என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தேனி முன்னாள் எம்எல்ஏ வும் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பாட்டாளி மக்கள் கட்சி வடிவில் ராவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த வழக்கில் ஜனநாயகத்தின் உண்மையான நீதி கிடைக்க உறு துணையாக இருந்த வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends