தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை வெளியானது திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 92.86 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த குரும்பேறி பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் மகள் காவியா பத்தாம் வகுப்பில் 493 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
அவரை பள்ளியின் சார்பில் நேரில் அழைத்து பள்ளியின் முதல்வர் கௌதம் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் அதேபோல அதே பள்ளியில் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மனோரஞ்சன் 490 மதிப்பெண் எடுத்த இரண்டாவது இடத்திலும் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கோபி மகள் பாவனா 489 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்தார்.
மேலும் பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது இந்த பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.