ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜாஸ்ரீ 10-ம் பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4 -ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தலா 100 மதிப்பெண்களும் தமிழ் மற்றும் கணக்கு பாடத்தில் தலா 99 மதிப்பெண்களும் ஆங்கலத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் இந்த மாணவி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேலும் பட்டேல் கல்வி சங்கத்தின் தலைவர் அப்துல்லா, பள்ளி நிர்வாக தாளாளர் ஆயிஷாபீவி, பள்ளி முதல்வர் முகம்மது இப்ராஹிம், நிர்வாக அதிகாரி முகம்மது இர்ஷாத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சாதனை படைத்த மாணவி
பூஜாஸ்ரீ-யை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கமுதி அருகே அபிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் தந்தை நாகநாதன் அஞ்சலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் இவரது தாய் உமாமகேஸ்வரி ஆவார் மேலும் மாணவி பூஜா ஸ்ரீயின் உடன்பிறந்த சகோதரி மீராஜாஸ்ரீ இதே பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் 486 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்
இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *