கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா , கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் அரங்கில் நடைபெற்றது.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் டி.ஆர்.கே.சரசுவதி கண்ணையன் மற்றும் நிர்வாகச் செயலர் டாக்டர்.கே.பிரியா,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் டாக்டர். பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில்,இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.பி.ஏ., இயக்குனர் டாக்டர்.சுதாகர்,அனைவரையும் வரவேற்று பேசினார்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக , ரூட்ஸ் குழுமங்களின் இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டு எம்.பி.ஏ.முதுகலை பட்டப்படிப்புகளை நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்…
முன்னதாக மாணவர்களிடையே பேசிய அவர்,கல்வியை நிறைவு செய்து புதிய அத்தியாயத்தை துவங்கும் மாணவர்கள் சவால்களை எதிர் கொண்டு அதனை தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்..
இதனால் கிடைக்கும் அனுபவங்களே வாழ்க்கையில் வெற்றியை தரும் என குறிப்பட்ட அவர்,தற்போது வேலை வாய்ப்புகளிலும்,தொழில் முனைவுகளிலும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறிய அவர்,கல்வியை நிறைவு செய்து வெளியில் செல்லும் மாணவர்கள் அந்த வாய்ப்புகளை சரியாக பயன் படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்..
விழாவில் துறை தலைவர்கள் , மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..