கோவை வந்த ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து துவங்கியது..
சாலை மார்க்கமாக கோவை,மதுரை,நெல்லை,கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்கள் வழியாக வரும் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இந்த ஜோதி யாத்ரா முடிவடைகிறது.
இந்நிலையில் கோவை வந்த ராஜீவ்காந்தி ஜோதி யாத்ரா குழுவினருக்கு கோவையில் ஐ.என்.டி.யூ.சி.பொது செயலாளர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது..
இதில் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் என பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து ராஜீவ் காந்தி ஜோதி யாத்ரா குழுவினர் ஐ.என்.டி.யூ.சி.முன்னால் தலைவர் மறைந்த நஞ்சப்பன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..
இதில் ராஜீவ் காந்தி ஜோதி யாத்ரா அகில இந்திய தலைவர் துரை,மாநில தலைவர் கிஷோர் பிரசாத், பொது செயலாளர் கராத்தே பஞ்சலிங்கம்,மற்றும் ஐ.என்.டி.யூ.சி.மாவட்ட தலைவர் பாசமலர் சண்முகம்,கோவை மாநகர காங்கிரஸ் தலைவர் கருப்புசாமி,தமிழ் செல்வன்,பாலு யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்…