திருவாரூர் வேலா, செந்தில் சித்ரா
பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா வானவேடிக்கையுகடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் விலகும் என்பது ஐதீகம் இவ்வாறு சிறப்புமிக்க இவ்வாலயத்தில் ஆண்டுதோறுசித்ரா பௌர்ணமி யை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறும்
அந்த வகையில் இந்த வருட சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கு 108 லிட்டர் பால், மஞ்சள், பழச்சாறு, சந்தனம், இளநீர், போன்ற அபிஷேக திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை பிரகார வலம் வந்து வீதி உலா காட்சி நடைபெற்று கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த தெப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து திருக்குளத்தை மூன்று முறை வலம் வந்தது. அதனை தொடர்ந்து வானவேடிக்கையுடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக கடுவன்குடி கிராம மக்கள் மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
மேலும் பாதுகாப்பு பணியில் பேரளம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழா ஏற்பாட்டினை சிபிஜி.வெற்றிச்செல்வன், சிபிஜி.அன்பழகன் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.