ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமி
பூஜை நடைபெற்றது.
கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர், பன்னீர்,திரவியபொடி, மஞ்சள்,திருநீரு, பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு அபிஷேகம் நடைபெற்று
பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் முருகன்
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மேலும் திமுக மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், காசிலிங்கம் மற்றும் பொது மக்கள் 500 க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.