துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மே 11ம் தேதி கண்ணனூர் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் (பிஎல்ஏ 2) கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் கலந்து கொண்டு, 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் மீண்டும் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்க வாக்காளர்களிடம் நேரில் சென்று திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும், என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, ஆதி திராவிடர் அணி மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன்,கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் லெனின், துணை செயலாளர் சரண்யா மோகன் தாஸ், மாவட்ட பிரதிநிதிகள் குமார், தமிழ்செல்வன்,இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார், மாணவரணி துணை அமைப்பாளர் கலை செல்வன், ஜேஎம்சி மணி,மெடிக்கல் பிரதீப்,கண்ணனூர் பளையம், வேலாயுதம்பாளையம், அய்யம்பாளையம், மீனாட்சி பட்டி ,கிளியனூர்பட்டி கிளை செயலாளர்கள் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன் ,ராஜா, குன்னுடையான், சங்கீதா சோமசுந்தரம் , நடேசன், செல்வம் ,மணிவேல் மற்றும் பிஎல்ஏ2 பாக முகவர்கள் பரமசிவம், தருண்குமார், சிவகுமார், சின்ராசு, வீரன் பாக முகவர்கள் பெரியசாமி, முருகேசன், வைர பெருமாள் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜூ
திருச்சி மாவட்ட செய்தியாளர்