இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் மத்திய ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை
தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேலும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தலைமைக் கழக பேச்சாளர்கள் முத்துச்சாமி,
காயாம்பு ஆகியோர் சாதனை திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் தங்கப்பாண்டி, நீதிராஜன், பொருளாளர் செந்தூர்பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன்,
பொதுக் குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, ஊராட்சி மன்ற தலைவர்
பாக்குவெட்டி நாகரத்தினம், மாவட்ட தொண்டரணி பாண்டி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் பெரியாள், நிறைபாண்டி,முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் நேதாஜி சரவணன்,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.