கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது
அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர் ஒன்றிய செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளர் முன்னால் ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரேம்குமார், அதிமுக கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட அனைத்து கட்சியை சார்ந்த நிர்வாகிகள் வேப்பூர் ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியருமான தங்கமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்
அதில் இலங்கியனூரில் செயல்பட்டு வந்த அங்கான்வாடி மைய கட்டிடம் பழுது ஏற்பட்டதால்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கபட்டது
தற்போது 50- க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மையத்தில் கல்வி பயின்று வருவதால் இலங்கியனூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் அப்போது வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் நல்லூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் ஜமாபந்தி அலுவலர்கள் உடனிருந்தனர்