பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் :

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :

2021 தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியை கொடுத்து 12 ஆயிரம் குடும்பங்களின் வாக்குகளை பெற்றது.

தற்போது ஐந்தாவது ஆண்டை தொடங்கி உள்ள நிலையில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நினைத்து பார்த்து நிறைவேற்ற வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்து வருகிறது.

அரசு வேலை, அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை, என்றாவது ஒருநாள் நிரந்தரம் ஆகும் என ஆர்வத்தோடு இந்த வேலையில் 2012 ஆம் ஆண்டு 16 ஆயிரம் பேர் சேர்ந்தார்கள்.

14 ஆண்டுகள் முடிந்தும்கூட இன்னும் நிரந்தரம் செய்யவில்லை என்பதால் தற்போதுள்ள 12 ஆயிரம் ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே மாதம் சம்பளம் கிடையாது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அந்த மாத செலவுக்கு கடன் வாங்கி கஷ்டப்படுகின்றனர்.

போனஸ் கூட வழங்கவில்லை என்பது மனகுமுறல் ஆன விஷயம்.

மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்பட அரசு சலுகை எதுவுமே இந்த 14 ஆண்டில் வழங்கப்பட்டதில்லை என்பது உழைப்பு சுரண்டல் ஆக பார்க்கப்படுகிறது.

10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்தபோது திமுக வெற்றி பெற்றால் பணி நிரந்தரம் செய்வோம் என முதல்வர் வாக்குறுதி கொடுத்து இருந்ததால் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

ஆனால் 2,500 ரூபாய் சம்பளம் மட்டுமே 2024 ஆம் ஆண்டில் உயர்த்தி வழங்கப்பட்டது.

இதனால் 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டாலும், மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகளான போனஸ், மருத்துவ காப்பீடு உள்பட எதுவுமே இல்லாத நிலை தொடர்வதால் முன்னேற்றம் கிடைக்க வில்லை.

தொகுப்பூதியம், கைவிடப்பட்டு காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே வாழ்வாதாரம் கிடைக்கும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது முதல்வர் பணி நிரந்தரம் குறித்து நல்ல முடிவு எடுப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, முதல்வர் இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட பணி நிரந்தரம் செய்து அரசாணையை வெளியிட வேண்டும்.

அடுத்து 2026 தேர்தலை நோக்கி புறப்படும் முதல்வர், முந்தைய தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை இப்போதே நிறைவேற்ற வேண்டும்.


S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல்: 9487257203

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *